சென்னையில் விஜயகாந்த் இன்று பிரசாரத்தை தொடங்குகிறார்.. பெரும் எதிர்ப்பார்ப்பில் தொண்டர்கள்!

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

சென்னை: சென்னையில் விஜயகாந்த் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இதனால் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. அதிமுக கூட்டணியில் இணைந்து தேமுதிக 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விஜயகாந்த் பிரசாரம் செய்ய மாட்டார் என கூறப்பட்டது.

இந்த நிலையில் தேர்தல் என்றாலே விஜயகாந்த் பிரசாரம் இல்லாமலா என்ற வருத்தம் தொண்டர்கள் மட்டுமல்லாது பொதுமக்களுக்கும் ஏற்பட்டது. இறுதி கட்ட பிரசாரம் நாளையுடன் ஓய்வடையவுள்ள நிலையில் விஜயகாந்த் வருவாரா வரமாட்டாரா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து விழுப்புரத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரேமலதா கூறுகையில் விஜயகாந்த் இன்றும் நாளையும் பிரசாரம் செய்யவுள்ளார் என்றார். அதன்படி அவர் மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை ஆகிய தொகுதிகளின் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று 4 மணிக்கு தனது பிரசாரத்தை தொடங்குகிறார். இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/vijayakant-today-starts-his-campaign-346900.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *