திருச்சி வங்கி கொள்ளை துப்பு துலங்குகிறது – சிக்கும் ஊழியர்கள்!

திருச்சி சமயபுரத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி அதிகாலை இந்த வங்கியின் பக்கவாட்டு சுவரில் துளைபோட்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள் லாக்கரை உடைத்து 700 நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 3 தனிப்படை போலீசார் பல்வேறு தகவல்களின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் வங்கியில் பணியாற்றும் சிலர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு பணியாற்றும் பணியாளர்கள்  மற்றும் ஊழியர்களின் செல்போன் எண்களின் மூலம் நடத்தப்பட்ட  விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் வுிரைவில் குற்றவாளிகளும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளும் பறிமுதல் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *