சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஈரோடு கணித ஆசிரியர் Dr.ஐசக் தேவக்குமார் அவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

Share on

ஈரோடு கிருஷ்ணாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஐசக் தேவக்குமார். கணித ஆசிரியரான இவர் சீனாவில் அரசு பள்ளிக்கூடத்தில் பணியாற்றி வருகிறார் . வேத கணிதம் முறையில் கணித பாடத்தை மாணவ – மாணவிகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கற்றுக்கொடுக்கும் இவருக்கு சீன அரசு சிறந்த வெளிநாட்டு ஆசிரியர் என்ற விருதினை வழங்கி கவுரவித்தது. 2 முறை இந்த விருதினை பெற்று ஆசிரியர் ஐசக் தேவக்குமார் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து உள்ளார்.

இந்த நிலையில் சீனாவின் குவான்ஜோவில் உள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் இந்திய தூதர் சுஜித் கோஷ் தலைமையில் ஆசிரியர் ஐசக் தேவகுமாருக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *