இரவு 10 முதல் காலை 6 மணி வரை மார்கெட் இயங்கும் – ஈரோடு கலெக்டர்!

Share on

உலகை அறிவியல் ரீதியாகக் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக நடத்தி வந்த மனித சமூகத்திற்கு உலை வைத்துள்ளது கரோனா வைரஸ். இதிலிருந்து மீள்வதற்காக மருத்துவ போர் நடத்தி வருகிறது உலகத்தின் மருத்து இதயம். இதில் இந்தியா தனது மொத்த அரசின் பலத்தையும் செலுத்துகிறது. அதே போல் நமது தமிழகமும்.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமே வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தான். இதன் தொடர்ச்சி தான் ஈரோடு. ஈரோட்டிற்கு தாய்லாந்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் 7 பேர் தொழுகை நடத்துவதற்காகக் கொல்லம்பாளையம் மற்றும் சுல்தான்பேட்டைக்குச் சென்று அவர்கள் தொழுகை மற்றும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். அதில் பங்கு பெற்றவர்கள் உட்பட பலருக்கும் இந்த வைரஸ் தொற்று இருக்குமோ என்ற பீதி ஏற்பட்டுள்ளது. அதில் இரண்டு பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதியானது.

இந்த நிலையில் 24.03.2020 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் மற்றும் மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் ஆகியோர் ஈரோட்டில் பிரதானமாக இயங்கும் நேதாஜி தினசரி மார்க்கெட்டுக்குச் சென்றார்கள். அங்கு வியாபாரிகள் ஒன்று பேசி ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளார்கள். அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை மார்க்கெட் இயங்க அனுமதி கொடுத்துள்ளார்கள். வெளியூரிலிருந்து வருகிற காய்கறிகளை வாங்கி இந்த கடைகளில் வைத்து விற்பனை செய்வதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள்.
 

அதேசமயம் பொதுமக்கள் இந்த மார்க்கெட்டுக்கு வந்துதான் காய்கறிகளை வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் குடியிருக்கிற பகுதியிலேயே இருக்கிற மளிகைக் கடைகள் காலையில் சிறிது நேரம்  திறந்திருக்கும் அந்தக் கடைகளில் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் மார்க்கெட்டுக்கு வந்து கூட்டமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *