காஷ்மீரில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த பனிச்சரிவுகளில் சிக்கி 8 பேர் பலி!

Share on

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் நேரிட்ட இருவேறு பனிச்சரிவுகளில் சிக்கி ராணுவ வீரர்கள் மூன்று பேர் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர்.

இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியான மசில் செக்டார் அருகே இருக்கும் ராணுவ நிலையை பனிச்சரிவு தாக்கியதில் அங்கு பணியில் இருந்த 3 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஒரு வீரரைத் தேடும் பணி நடந்து வருவதாக பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இந்த பனிச்சரிவின் போது ராணுவ வீரர்கள் 5 பேர் சிக்கிக் கொண்டனர். மீட்புப் பணியில் 3 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. ஒருவர் மோசமான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பனிச்சரிவில் சிக்கி மாயமான மற்றொரு வீரரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கந்தெர்பால் மாவட்டத்தில் நேரிட்ட மற்றொரு பனிச்சரிவில் சிக்கி பொதுமக்கள் 5 பேர் பலியாகினர். 4 பேர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *