புதுக்கோட்டையில் கல்வி சீர் வழங்கும் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி_பிடாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி சீர் வழங்கும் திருவிழா நடைபெற்றது.இதில் தேங்காய்பழம்,கடிகாரம்,உடைகள்,சில்வர் வாளி,குடம்,மேஜை,நாற்காலிகள்,இனிப்புகள்,பிஸ்கட், புத்தகங்கள்,முதலுதவி பெட்டி,கண்ணாடி,எழுது பொருள்கள்,கணித பெட்டி,குப்பைத்தொட்டி,விளையாட்டு பொருட்களை மங்கல இசை முழங்க பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் சீர் எடுத்து வந்தனர்.
அதனை தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர் ராஜா சந்திரன் அவர்கள் விழாவினை தொடங்கிவைத்து தலைமை தாங்கினார்.பிறகு பள்ளிக்கு கொண்டு வரப்பட்ட சீர் பொருட்கள் பள்ளிக்குஅற்பணிக்கப்பட்டது.

சிறப்பு ஆசிரியர் சக்திவேல்ஜமுருகன் நன்றி கூறினார்.விழாவில் வட்டார கல்வி அலுவலர் ராஜா சந்திரன்,பால் டேவிட் ,வட்டார வளமையம் மேற்பார்வையாளர் செல்வகுமார் ,ஆசிரியர் பயிற்றுனர்கள் புவனேஸ்வரி, பரிசுத்தம், அன்பழகன் தலைமையாசிரியர் பார்த்தசாரதி மற்றும் ஆசிரியர்கள் முன்னாள் ஊராட்சி தலைவர் வள்ளிக்கண்ணு ,ஊர் அம்பலம் மாணிக்கம்,பள்ளி குழு தலைவி அழகு, பணித்தள‌ பொறுப்பாளர் மீனாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *