தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதல் பிசிஆர் டெஸ்ட் கிட்டுகள் அனுப்ப வேண்டும் பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் கோரிக்கை!

Share on

சென்னை:கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரணம் தொடர்பாக பிரதமருடனான ஆலோசனையின்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-


தமிழகத்தில் 30 அரசு ஆய்வகங்கள், 11 தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இலவசமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கையால் கொரோனா இறப்பு விகிதம் 1.2 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 54 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதல் பிசிஆர் டெஸ்ட் கிட்டுகள் அனுப்ப வேண்டும். மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு உடனே நிதியை விடுவிக்க வேண்டும்.

100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளத்தை ரொக்கமாக வழங்க அனுமதிக்க வேண்டும்.  ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2020-21ம் நிதியாண்டுக்கான 50 சதவீத நிதியை விடுவிக்க வேண்டும். விவசாயிகள் நேரடியாக விளைபொருட்களை கொண்டு செல்ல போக்குவரத்து மானியம் வழங்க வேண்டும்.


ரேசன் அட்டைதாரர்களுக்கு உணவுப்பொருட்கள் கொள்முதல் செய்து விநியோகம் செய்வதற்காக 1321 கோடி ரூபாய் விடுவிக் வேண்டும். சிறு, குறு தொழில்துறை பெற்றுள்ள கடன்களுக்கான வட்டியை 6 மாதம் தள்ளுபடி ய்ய வேண்டும். ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி செலுத்த செலுத்த 6 மாதம் அவகாசம் வழங்கவேண்டும். டிசம்பர்- ஜனவரி மாதத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை விடுவிக்க வேண்டும்.


இவ்வாறு அவர் பேசினார்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *