ஊக்க மருந்து பயன்படுத்தியதாக ஹரியானாவைச் சேர்ந்த தடகள வீராங்கனை மன்ப்ரீத் கவுருக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் 4 ஆண்டுகள் தடை.. பதக்கங்கள் பறிப்பு!

சீனாவில் நடந்த போட்டியின்போது மன்ப்ரீத்திடம் நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில், தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல், அடுத்தடுத்து நடப்பட்ட சோதனையிலும் முதல் போட்டியில் பயன்படுத்திய ஊக்க மருந்தின் தாக்கம் மன்ப்ரீத் கவுரிடம் இருப்பது தெரியவந்தது.

முதற்கட்டமாக, தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (நடா) அவரை இடைநீக்கம் செய்தது. விசாரணையின் முடிவில் மன்ப்ரீத் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் 4 ஆண்டுகள் தடை விதித்து நடா நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த தடை காலம் 2017-ம் ஆண்டு ஜூலை 20-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், அந்த காலகட்டத்தில் மன்ப்ரீத் கவுர் வென்ற பதக்கம் மற்றும் சாதனைகளை இழக்க வேண்டியதிருக்கும்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *