வாக்காளர்களே..!ஓட்டு போடப்போகும்போது இதை மட்டும் கொண்டு வராதீங்க.. தேர்தல் ஆணையம் ஸ்ட்ரிக்ட் உத்தரவு!

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

சென்னை: தேர்தலில் ஓட்டுப்போடப்போகும் பொதுமக்கள் மறந்தும் கூட தங்களின் ஆறாவது விரலாக கருதும், செல்போனை எடுத்துச் சென்றுவிடாதீர்கள்.. அப்புறம் சிக்கலாகிவிடும் என எச்சரித்துள்ளது தேர்தல் ஆணையம். 17வது லோக்சபா தேர்தல் மற்றும் 18 சட்டசபை இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, நாளை மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இன்று நிருபர்களிடம் பேட்டியளித்தார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு.

உயர் அதிகாரிகள், போலீசார் அவர் அப்போது வாக்காளர்களுக்கு முக்கியமான ஒரு தகவலை கூறினார். அதாவது, வாக்குப்பதிவு மையத்தின் 100மீட்டர் எல்லைக்குள் பொதுமக்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதுதான் அந்த தகவல். தேர்தல் நடத்தும் அதிகாரிகள், மற்றும் காவல் உயர் அதிகாரிகள் மட்டுமே இப்பகுதிக்குள் செல்போன் பயன்படுத்த அனுமதி பெற்றவர்களாகும்.

செல்போன் போச்சு எனவே, வாக்குச்சாவடி அருகே சென்று செல்ஃபி எடுத்து பேஸ்புக்கில் அப்லோடு செய்யலாம் என்ற திட்டத்தோடு யாரும் போனும் கையுமாக ஓட்டுப்போட கிளம்பிவிடாதீர்கள். அப்படி செய்தால், போனை பிடுங்கி வைத்துக்கொள்ளும் நிலைமை கூட வரலாம். செல்போனில் என்னென்ன தனிப்பட்ட ரகசியங்கள் வேண்டுமானாலும் இருக்க கூடும். அது இன்னொரு அதிகாரியின் கைகளுக்கு செல்லும் வாய்ப்பை நீங்களே ஏன் கொடுக்க வேண்டும்?

அனிச்சை செயல் பலருக்கும் செல்போன் என்பது 6வது விரல் போல. கழிவறைக்கு கூட கையோடு செல்போனை கொண்டு சென்று நேரம் கழிப்பதில் அப்படி ஒரு ஆனந்தம் அவர்களுக்கு. எனவே அனிச்சை செயலாக, சட்டைப்பாக்கெட்டில் செல்போனை வைத்துக் கொண்டு வாக்குச்சாவடி பக்கம் செல்ல வாய்ப்புள்ளது. அவர்கள் இந்த உத்தரவை தயவு செய்து நினைவில் கொள்ளவும்.

அளவு அவசியம் பேஸ்புக் லைவ் செய்வது, செல்பி எடுப்பது, போனில் பேசுவது என எந்த ஒரு விஷயத்திற்காகவும், வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் தொலைவிற்குள் செல்போனை எடுத்துச் சென்றுவிடாதீர்கள் என்பதுதான் தேர்தல் ஆணையம் சொல்ல விழைந்துள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/voters-should-not-carry-cell-phones-near-poll-booths-satyabrata-sahoo/articlecontent-pf367742-346980.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *