சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள காட்டாம் பூரில் வெறிநாய் ஒன்று சிறுவனை கடித்து குதறியது!

Share on

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அருகே உள்ள காட்டாம்பூரில் ராஜா என்பவர் வசித்து வருகிறார் இவருடைய மகன் ராகுல் ராஜ் வயது 5 இன்று அதிகாலை அவரின் வீட்டின் முன்பு இருந்து வந்துள்ளார். சிறுவன் வசிக்கும் தெருவில் இரண்டு நாய்கள் சண்டை போட்டுக்கொண்டு வந்துள்ளது. எதிர்பாராதவிதமாக ராகுல் ராஜ் மீது பாய்ந்து முகம் தலை பின்பகுதி என உடலின் பல பகுதிகளில் கடித்து குதறியது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் இச் சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து சிறுவனை மீட்டு உடனடியாக திருப்பத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் உள்ள மருத்துவர் சிறுவனுக்கு முதலுதவி அளித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கையில் உள்ள மருத்துவ மனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

சிறுவனுக்கு ஏற்பட்ட சம்பவத்தின் காரணமாக அப்பகுதியிலேயே சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது .மேலும் பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் மூலமாக கிராம பகுதிகளில் சுற்றித்திரியும் வெறி நாய்களை அடையாளம் கண்டு அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அப்படி செய்தால்தான் இது போன்ற அசம்பாவித நிகழ்வுகளிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளலாம் என்று அப்பகுதி மக்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள

Whatsapp Link- https://chat.whatsapp.com/CNEmI480cAS1v2NhRDW0kA

Facebook Link https://www.facebook.com/groups/SivagangaiNews/

Mr.Che #மிஸ்டர்.சே

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *