https://www.mrchenews.com/wp-content/uploads/2020/08/collector.jpg

விற்பனை உரிமம் இன்றி உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!!

Share on

புதுக்கோட்டை மாவட்டத்தில் குறுவை பருவத்திற்கு தேவையான உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி கூறியதாவது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக அனைத்து வட்டாரங்களிலும் மழை பெய்து வருகிறது. குறுவை பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெல் சாகுபடி தற்போது மேலுரம் இடும் தருவாயில் உள்ளது. மேலும், மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை ஆகிய பயிர்களுக்கு தேவையான உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தற்போது மாவட்டத்தில் 2164 மெட்ரிக் டன் யூரியா, 1361 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 1160 மெட்ரிக் டன் பொட்டாஷ் மற்றும் 3193 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உர விற்பனையாளர்கள் விற்பனை உரிமத்தில் அனுமதி வழங்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டும் உரம் கொள்முதல் செய்ய வேண்டும். மொத்த விற்பனையாளர்கள் பிற மாவட்டங்களுக்கு விற்பனை செய்யக்கூடாது.

விற்பனை உரிமம் இன்றி உரம் விற்பனை செய்தால் உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மானிய விலையில் உள்ள உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் மட்டும் விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விபரங்கள் அடங்கிய தகவல் பலகை விவசாயிகள் அறியும் வண்ணம் பராமரிக்க வேண்டும். உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகள் உரம் வாங்கும்போது உரிய ரசீது வழங்க வேண்டும். உர வரவு மற்றும் இருப்பு விவரங்கள் சரியாக பராமரிக்காமல் இருந்தால் உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985 ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகள் தங்களது மண்வள அட்டையில் பரிந்துரைக்கப்பட்டவாறு உரங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். இதனால் உரச்செலவை குறைக்கலாம். உரங்கள் விற்பனை முனையக் கருவி மூலம் விற்பனை செய்வதால் கட்டாயம் ஆதார் கார்டு கொண்டு செல்ல வேண்டும். மேலும் உரம் வாங்க செல்லும் பொழுது அரசு அறிவித்துள்ள படி விவசாயிகள் சமூக இடைவெளி விட்டு சுயபாதுகாப்பு முறைகளான முககவசம் அணிதல், அடிக்கடி கைகழுவுதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள உர ஆய்வாளரை தொடர்பு கொள்ளலாம் அல்லது வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தின் 04322 221666 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டறிந்து கொள்ளலாம்.

எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறுவை பருவத்திற்கு தேவையான உரங்களை வாங்கி பயன்படுத்தி நெற்பயிரில் கூடுதல் மகசூல் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றார்.

#MrChe #மிஸ்டர்சே

புதுக்கோட்டை மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள

Whatsapp Link- https://chat.whatsapp.com/GSWQL1TYh5rFqlqlSKOdVU

Facebook Link – https://www.facebook.com/groups/PudukaiNews/

Twitter Link – https://twitter.com/PudukaiNews?s=08


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *