ஆஸ்திரேலியாவில் தோனியின் பயிற்சி ஆட்டத்தை பார்க்க வந்த 87 வயது மூதாட்டி

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய வீரர் தோனி  அந்நாட்டுக்கு சென்றிருக்கிறார்.

இந்த நிலையில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தோனியை பார்பதற்காக  87 வயது ஆஸ்திரேலிய மூதாட்டி வந்த உணர்வுப்பூர்வமான நிகழ்வு நடந்துள்ளது.

இது தொடர்பான செய்தியை ஆஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அதில் , எடித்  நார்மன் என்ற 87 வயது மூதாட்டி தோனியின் பயிற்சி ஆட்டத்தை பார்க்க வந்திருக்கிறார். பயிற்சி முடிந்ததும் தோனியும், எடித்தும்  ஒன்றாக அமர்ந்து சிரித்து பேசுகின்றனர்..

இது தொடர்பான வீடியோ ஒன்று தோனி ரசிகர்களால் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *