சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டு உள்ளது. எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் புகழ்பெற்ற பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இது தென்கைலாயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அப்போது ஏராளமான பக்தர்கள் அங்குள்ள 7 மலைகளில் ஏறிச் சென்று அங்கு இருக்கும் லிங்கத்தை தரிசித்து விட்டு திரும்புவது வழக்கம்.

மேலும் வெள்ளியங்கிரி மலையில் அவ்வப்போது காலநிலை மாற்றம் ஏற்படும். எனவே ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மட்டுமே மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங் கப்படும். இந்த நிலையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மலை மீது செல்ல தற்போது பக்தர்களுக்குஅனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் மலை மீது சென்று லிங்கத்தை தரிசித்து வருகிறார்கள். அதே நேரத்தில் மலைஏறும் பக்தர்களுக்கு வனத்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *