தீபிகா ரன்வீர் சிங் திருமணம் முடிந்தது – நாளை மீண்டும் திருமணம்

இத்தாலி:  பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிகை தீபிகா படுகோனேவை இன்று  திருமணம் செய்து கொண்டார்.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிகை மற்றும் தீபிகா படுகோனே இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் இத்தா லியில் உள்ள லேக் கோமோ பகுதியில் இன்று அவர்களது திருமணம் கொங்கனி முறைப்படி நடந்துள்ளது. இதையடுத்து அவர்கள் நாளை சிந்தி முறைப்படி திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இந்த திருமண நிகழ்ச்சிகளில் அவர்களின் குடும்பத்தார்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். திருமணம் நடைபெறும் இடம் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. விருந்தினர்கள் கையில் சிறப்பு பேண்ட் கட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த இடத்திற்குள் நுழைய செல்போனில் வரும் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டும். இத்தனை கெடுபிடிகள் உள்ளதால் திருமண புகைப்படங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *