“அரசுப்பள்ளி ஆசிரியைகளுக்கு இணையதள பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்க முடிவு” – பள்ளிக்கல்வித்துறை.

Share on

அரசுப்பள்ளி ஆசிரியைகளுக்கு இணையதள பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

ஸ்மார்ட் போன் பயன்படுத்துதல், இணைய தளத்தை பாதுகாப்பாக கையாளுதல் தொடர்பான சிறப்பு பயிற்சிகளை அரசுப்பள்ளி ஆசிரியைகளுக்கு வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

அதன்படி, மாவட்டந்தோறும் 6 பேர் என 192 ஆசிரியைகளும், கூடுதலாக 8 ஆசிரியைகளும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அண்ணா மேலாண்மை நிறுவனம் சார்பில் பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறப்பு பயிற்சி பெறும் ஆசிரியைகளுக்கு பயிற்சி கட்டணமாக தலா இரண்டாயிரத்து 200 ரூபாயை பள்ளிக்கல்வித்துறை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *