இத்தாலியில் பலி எண்ணிக்கை 7,503 ஆக உயர்வு – குணமடைந்தோர் 9,362!

Share on

இத்தாலியில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,386 ஆகவும், மொத்த பலி எண்ணிக்கை 7,503 ஆகவும் உயர்ந்துள்ளது.

இத்தாலியில் கரோனா பாதித்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9,362 ஆக உள்ளது. இதன் மூலம் உலக அளவில் பலி எண்ணிக்கையில் தொடர்ந்து இத்தாலி முதல் இடத்தில் உள்ளது.

திணறும் நியூ யார்க் மருத்துவமனைகள்

உலக நாடுகளில் வல்லரசு நாடு என்று அடையாளம் காணப்படும் அமெரிக்காவே, கரோனா பாதிப்பினை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது.

அமெரிக்காவில் இன்று காலை நிலவரப்படி கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,472. நேற்று ஒரே நாளில் 261 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுளள்து. நாட்டில் ஒட்டுமொத்தமாக மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1,032 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்கா முழுவதும் உள்ள மருத்துவமனைகள், போதிய படுக்கை வசதிகள் இல்லாமலும், பாதுகாப்புக் கருவிகள் இல்லாமலும் திணறி வருகிறது. சில நோயாளிகள் படுக்கை வசதிக்காக பல மணி நேரம் காத்திருக்கும் நிலையும், காத்திருக்கும் நிலையிலேயே சிலர் மரணிக்கும் நிலையும் காணப்படுகிறது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நபர்களின் உடல்களை எரிக்கவும் நேரமின்றி, அவற்றை குளிர்பதனப் பெட்டிகளில் வைத்து அமெரிக்கா பாதுகாத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இது அனைத்துக்குமே, தங்களுக்கு கரோனா பராவது, இதுபோன்றதொரு அவசர நிலை ஏற்படாது என்று அமெரிக்கா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்ததேக் காரணம் என்று கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் 4,71,576 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 21,297 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவே இந்தியாவில் 665 ஆகவும், பலி 13 ஆகவும் உள்ளது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *