நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 – டாஸ் வென்ற இந்திய

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய சாதனை படைத்தது. இந்நிலையில் இரு அணிகள் இடையிலான மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் முதல் ஆட்டம் வெல்லிங்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். ஒருநாள் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட இளம் வீரர் ரிஷப் பந்த் 20 ஓவர் தொடரில் விளையாடுகிறார். அவரது அதிரடி ஆட்டம் அணிக்கு பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து மண்ணில் இதுவரை இந்திய அணி 20 ஓவர் போட்டியில் வெற்றி பெற்றது இல்லை. முதல் முறையாக வெற்றியை பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *