கோழி, முட்டை, இறைச்சி உண்பதால் கொரோனா பரவாது- தமிழக அரசு மீண்டும் விளக்கம் !

Share on

சென்னை:
கொரோனா வைரஸ் தொடர்பாக பீதியை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு போலியான செய்திகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக கோழி, முட்டை மற்றும் இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவும் என தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல்கள் பகிரப்படுகிறது. 


ஆனால் அசைவ உணவுகள் சாப்பிடுவதால் கொரோனா பரவாது என தமிழக அரசு விளக்கம் அளித்தது. அதன்பிறகும் கொரோனா தொடர்பான போலி செய்திகள் தொடர்ந்து உலா வருகின்றன. இதனால் இறைச்சி விரும்பிகள் அச்சமடைந்துள்ளனர். 

இந்த விவகாரம் தொடர்க தமிழக அரசு மீண்டும் விளக்கம் அளித்துள்ளது. கோழி, முட்டை மற்றும் இறைச்சி உண்பதால் கொரோனா பரவாது என அரசு கூறி உள்ளது.
‘கோழி, முட்டை, குறித்து சமூக ஊடகங்கள் மூலம் மக்களிடம் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இதுபோன்ற வதந்திகளால் கோழி வளர்ப்பு தொழில் நலிவடைந்து பொருளாதார இழப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. தவறாக வழிநடத்தும் வதந்திகள் மூலம் நமது புரத தேவையில் இழப்பு ஏற்படுகிறது. எனவே, தயக்கமில்லாமல் அனைவரும் கோழி, முட்டை மற்றும் இறைச்சியை உட்கொள்ளலாம்’ என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *