https://www.mrchenews.com/wp-content/uploads/2020/06/g1.jpg https://www.mrchenews.com/wp-content/uploads/2020/06/g2.jpg

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்வு!

Share on

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கபட்டுள்ளனர் இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று வரை 126 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர் அதில் 40 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர் 70 பேர் சிகிச்சை பெற்று வந்தனர் இரண்டு பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து உள்ளனர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் மாவட்டத்தில் புதிதாக இன்று 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் புதுக்கோட்டையில் உள்ள சிறப்பு சிகிச்சை பிரிவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது மாவட்டத்தில் 89 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் தொடர்ந்து தொற்று நோய் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் மேலும் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் சென்னையில் இருந்து வருபவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி தொற்று பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

MrChe #மிஸ்டர்சே

புதுக்கோட்டை மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள

Whatsapp Link- https://chat.whatsapp.com/Fe8Xy7B6CjgKNzw5eztn6U

Facebook Link – https://www.facebook.com/groups/PudukaiNews/


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *