https://www.mrchenews.com/wp-content/uploads/2020/07/corona.jpg

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் குழந்தை உள்பட 43 பேருக்கு கொரோனா!

Share on

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனா தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை குறைந்திருந்தது. இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுக்கோட்டையில் திருவப்பூர் பகுதியில் 4 பேருக்கும், தொண்டைமான்நகரை சேர்ந்த 3 பேருக்கும், பூங்கா நகரை சேர்ந்த 53 வயது ஆண், சாத்தப்பாநகரை சேர்ந்த 23 வயது பெண், தெற்கு சந்தைப்பேட்டையை சேர்ந்த 24 வயது ஆண், கே.எல்.கே.எஸ். நகரை சேர்ந்த 63 வயது ஆண், காமராஜபுரம் மற்றும் கலீப் நகர் பகுதியை சேர்ந்த தலா 2 பேருக்கும், தெற்கு 3-ம் வீதியை சேர்ந்த 53 வயது ஆண், வடக்கு ராஜ வீதியில் 2 பேருக்கும், மேல 3-ம் வீதியை சேர்ந்த 32 வயது ஆண், குறிஞ்சி நகரை சேர்ந்த 15 வயது ஆண், அடப்பன்வயலை சேர்ந்த 37 வயது ஆண், பெரியார் நகரை சேர்ந்த 42 வயது பெண் மற்றும் நிஜாம் காலனியை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் அரிமளம் மயிலாடும்பாறை பகுதியை சேர்ந்த 23 வயது நிறைமாத கர்ப்பிணி, கடந்த 30-ந் தேதி திலகர் திடலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே அந்த கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அந்த பெண், குழந்தை மற்றும் அவருக்கு உதவியாக இருந்தவர் ஆகிய 3 பேரும் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அறந்தாங்கியில் எழில்நகர்வீதி, அண்ணாநகர், எல்.என்.புரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 4 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் ஒருவர் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரிபவர் ஆவார். 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 418 ஆக உயர்ந்துள்ளது. இதில் 247 பேர் சிகிச்சையில் உள்ளனர். 165 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை தற்போது 8 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews/

MrChe #மிஸ்டர்சே


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *