புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா!!!

Share on

புதுக்கோட்டை கலீப்நகரில் ஏற்கனவே கொரோனா பாதித்தவரின் குடும்பத்தில் 55 வயதுடைய பெண் , 29 வயதுடைய பெண் , 9 வயது , 6 வயது சிறுவர்கள் ஆகி யோருக்கு நேற்று தொற்று உறுதியானது . இதேபோல அதே பகுதியை சேர்ந்த 30 வயது இளம்பெண் , 10 வயதான அவரது மகன் ஆகி யோருக்கு தொற்று ஏற்பட்டது .

மேலும் விராலிமலையை சேர்ந்த 32 வயது பெண் , விராலூரை சேர்ந்த 23 வயது இளம்பெண் , மாத்தூரை சேர்ந்த 55 வயது ஆண் , 50 வயதான அவரது மனைவி , அறந்தாங்கி அழியாநிலையை சேர்ந்த 28 வயது வாலிபர் வல்லபத்திராகோட்டையில் 30 வயது வாலிபர் , ஆவுடையார் கோவிலில் 44 வயதான ஆண் ஒருவர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது . இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை உள்ளதாக கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட பட்டியலில் கூறப்பட்டிருந்தது . இதற்கிடையில் அரிமளம் ஒன்றியம் கடியாபட்டி ராயவரம் , அரிமளம் , ஏம்பல் , சமுத்திரப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்னை மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்த 44 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் யாருக்கும் தொற்று இல்லை . கடியாபட்டியில் கொரோனா பாதித்த பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கும் , அரிமளம் ஒன்றியத்திற்கு சென்னையில் இருந்து வந்த 43 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது . இவர்களின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது .

இதற்கிடையில் எகிப்து நாட்டில் இருந்து வந்த ஆலங்குடி பாச்சி கோட்டையைச் சேர்ந்தவாலிபர் ஒருவர் . ஆலங்குடியில் மாணவியர் விடுதியில் தங்க வைத்திருந்தனர் . அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது . இதேபோல சம்பட்டி விடுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கும் . தவளை பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கும் கொரோனா தொற்று உறுதியானது . அவர்கள் ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் .

புதுக்கோட்டை மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள

Whatsapp Linkhttps://chat.whatsapp.com/HMhScZJYhhzAjruxAC5i3G

Facebook Linkhttps://www.facebook.com/groups/PudukaiNews/

#MrChe #மிஸ்டர்சே

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *