தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

Share on

தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த செவ்வாய்க்கிழமை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 29 ஆக இருந்த நிலையில், மதுரை, ஈரோடு, சென்னை ஆகிய மாவட்டத்தைச் இருந்த தலா இரண்டு பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை இன்று தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.முன்னதாக, தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 ஆக இருந்த நிலையில் புதன்கிழமை ஒரேநாளில் 8 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

 இதைத்தொடர்ந்து துபையில் இருந்து திருச்சி வந்த 24 வயதான ஆண் ஒருவருக்கு கரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று 6 பேருக்கு கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *