
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறுகையில், திமுகவை கமல்ஹாசன் விமர்சனம் செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன். விமர்சனம், தேர்தல் நேரத்தில் பா.ஜ.வுக்கு உதவுமே தவிர, அவரின் கொள்கைக்கு உதவாது. கமலின் விமர்சனம் எனது கவனத்திற்கு முன்னரே வரவில்லை. அவசியம் இல்லாமல் கமல் விமர்சனம் செய்துள்ளார். வாக்குகள் சிதறக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில் தான் கமலுக்கு அழைப்பு விடுத்தேன். கமலை கூட்டணியில் சேர்ப்பது குறித்து திமுக தான் முடிவு செய்ய வேண்டும் எனக்கூறினார்.
முன்னதாக, கூட்டணி அழைப்பு பற்றி, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் கூறுகையில்,கே.எஸ்.அழகிரி அவரது கருத்தை தெரிவித்திருக்கிறார், என் கருத்தை நான் அவரிடம் தெரிவிக்கிறேன் எனக்கூறினார்.