தூத்துக்குடியில் மீனவர்களுக்கு அரசு வழங்கிய சாட்டிலைட் ஃபோன்களுக்கு சிக்னல் கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது!!

Share on

தருவைகுளத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள்,  மீன்பிடிப்பிற்கு செல்கின்றனர். இந்நிலையில் மீன்வளத்துறை சார்பில் தங்களுக்கு வழங்கப்பட்ட சாட்டிலைட் ஃபோன்கள் சில நாட்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்ததாகவும், தற்போது அவற்றுக்கு சிக்னல் கிடைப்பதில்லை என்றும் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  இதனால், பேரிடர் காலங்களில் தகவல் தெரிவிக்க முடியாத சூழல் உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.  இந்நிலையில், சாட்டிலைட் ஃபோன்களை பயன்படுத்துவது குறித்து மீனவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *