கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரஜினிக்கு எதிராக புகார் மனு!

Share on

பெரியாரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திராவிடர் விடுதலை கழகம் அமைப்பு புகார் மனு அளித்துள்ளது.

அந்த அமைப்பின் மாநகர தலைவர் நேருதாஸ், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அதில், துக்ளக் விழாவில் ரஜினி பேசுகையில் பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பொய்யான தகவலை வெளியிட்டதாகவும், இதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நேருதாஸ், ரஜினி மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தர்பார் படம் திரையிடப்பட்டு இருக்கும் திரையரங்குகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *