
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் 2 கைகளாலும் மூன்று மொழிகளில் எழுதியும் ஓவியங்கள் வரைந்தும் அசத்துகிறார்.
பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த செந்தில்வேல் – செல்வி தம்பதியரின் மகளான தனுவர்ஷா, தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு நுண்ணுயிரியல் பயின்று வருகிறார்.
தனது ஆறு வயதில் இரு கைகளாலும் தனித்தனியாக எழுதத் தொடங்கிய தனுஷா, அதன் பின்னர் ஒரே நேரத்தில் இருகைகளாலும் எழுத பயிற்சி எடுத்துள்ளார்.
தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் இரு கைகளால் ஒரே நேரத்தில் எழுதுகிறார் தனுவர்ஷா. அதேபோல் அழகழகான ஓவியங்களையும் இரு கைகளால் வரைகிறார் அவர்.
மகளின் இந்தத் திறமையை அவரது பெற்றோர் ஊக்குவித்து வரும் நிலையில், தனது திறமையை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெறவைக்க விண்ணப்பித்துள்ளார்.
செய்தியாளர், அப்துல் சலாம்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!