சீனாவில் சாலை விபத்தில் 15 பேர் பலி

சீனா: சீனாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒன்றில் 15 பேர் பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவின் வடமேற்கு மாகாணமான கன்சு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் நேற்று இரவு வாகனங்கள் வரிசையாக நின்றுகொண்டிருந்தன. அப்போதுஅங்கு சாலையில் அதிவேகமாக வந்த கனரக வாகனம் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருந்த பிற வாகனங்களின் மீது கடுமையாக மோதியது. இதில் சுமார் 30 வாகனங்கள் கடுமையான சேதமாகின.

இந்த விபத்தில் வாகன ஓட்டிகள், பயணிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 30-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் கனரக வாகன ஓட்டுநர் காயங்களுடன் உயிர்தப்பினார். அவரைக் கைது செய்த காவல்துறையினர் விபத்து குறித்து  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *