trichy  Video News

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உழவர் சந்தை !

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து மத்திய பேருந்து நிலையத்தில் தென்னூர் உழவர் சந்தை சனிக்கிழமை முதல் இயங்கத் தொடங்கியது. உழவர் சந்தைகளில் வரும் பொதுமக்களிடையே சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை உறுதி செய்யும் வகையில் உழவர் சந்தைகள்…

திருச்சி மாநகராட்சி பூங்காக்கள் மூடல்!

கரோனா அச்சம் காரணமாக திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பூங்காக்கள் அனைத்தும் புதன்கிழமை முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் பரவுதலை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்குகள், மால்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, பொதுமக்கள்…

ஸ்ரீரங்கம் கோயிலில் திருச்சி மாநகராட்சி சார்பில் கோயில் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது!

கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் திருச்சி மாநகராட்சி சார்பில் கோயில் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டத. திருச்சி மாவட்டம் முழுவதும் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. திருச்சி…

திருச்சி வழியாக செல்லும் ரயில் சேவைகளில் மார்ச் 28 வரை முக்கிய மாற்றம்!

மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக திருச்சி வழியாக செல்லும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: மதுரை ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், மயிலாடுதுறை-திண்டுக்கல் பயணிகள் ரயில்…

கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி!

திருச்சி புத்தூரில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் பாதிப்பு சிகிச்சைக்காக சிறப்பு வார்டு கடந்த மாதம் ஏற்படுத்தப்பட்டது. திருச்சியில் விமான நிலையம் இருப்பதால் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையத்திலேயே மருத்துவகுழுவால் பரிசோதிக்கப்படுகிறார்கள்….

திருச்சியில் இருந்து செல்லும் விமான சேவைகளில் அதிரடி மாற்றம்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திருச்சி-மலேசியா இடையே இயக்கப்பட்டு வரும் ஏா் ஏசியா விமானப் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததையடுத்து திருச்சி -மலேசியா இடையே இயக்கப்பட்டு வரும் விமானங்களில் சில…

பெண் குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை-தமிழிசை சவுந்தரராஜன்!

திருச்சி அனைத்து பெண்கள் சங்கங்கள் மற்றும் ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி சார்பில் உலக மகளிர் தின விழா திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. விழாவில் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்…

தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் திருச்சி வருகை!

தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செவ்வாய்க்கிழமையான இன்று திருச்சிக்கு வருகை தந்துள்ளார். திருச்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த அவர், திருவரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். கருடாழ்வார் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார்….

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி-க்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்- திருமாவளவன்!

திருச்சி: குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் நடப்புக் கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்த அவர், விமான…

திருச்சி மாவட்டம் திருவானைக்கா கோயிலில் 505 தங்கக்காசுகள் கண்டெடுப்பு !

ஸ்ரீரங்கம்: திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேசுவரி அம்மன் உடனுறை சம்புகேசுவரா் திருக்கோயில் வளாகத்தில் நந்தவனம் அமைப்பதற்காக புதன்கிழமை பள்ளம் தோண்டப்பட்ட போது 505 தங்கக்காசுகள் கண்டெடுக்கப்பட்டன. பஞ்சப்பூதத் தலங்களில் நீா்த் தலமாக விளங்கி வரும் இக்கோயிலில், பிரசன்ன விநாயகா் சன்னதி பின்புறத்தில் (அகிலாண்டேசுவரி…