Thiruppur  Video News

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், சபலத்துக்கும் மதுபோதைக்கும் அடிமையாகி இரண்டரை வயது பேத்தியை தொலைத்து நிற்கும் முதியவர்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் முதியவரை மயக்கி, அவரது இரண்டரை வயது பேத்தியை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். 62 வயதில் சபலத்துக்கும் மதுபோதைக்கும் அடிமையாகி பேத்தியை தொலைத்துவிட்டு நிற்கும் நபர் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி… பல்லடம்…

திருப்பூரில் சமூக நல்லிணக்கப் பொங்கல்: இஸ்லாமிய பெண்கள் உள்பட 550 பெண்கள் பங்கேற்பு!

திருப்பூரில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் இஸ்லாமிய பெண்கள் உள்பட 550 பெண்கள் பொங்கல் வைத்தும் முளைப்பாரி எடுத்தும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். தமிழர்களால் பாகுபாடில்லாமல் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் திருப்பூர்…

குன்னத்தூரில் ரூ.20 லட்சத்துக்கு கருப்பட்டி ஏலம்!

குன்னத்தூர்:திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட கருப்பட்டி கூட்டுறவு விற்பனை சம்மேளனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமை தென்னை மற்றும் பனங்கருப்பட்டி ஏலம் நடைபெறுவது வழக்கம். நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு உற்பத்தியாளர்கள் 4 ஆயிரம் கிலோ தென்னங்…

டிக்-டாக் நட்பால் கர்ப்பமான மாணவி தீக்குளித்து தற்கொலை: வாலிபர் போக்சோவில் கைது!

திருப்பூர்:சமூக வலைதளமான பேஸ்புக், வாட்ஸ்அப், டிக்-டாக் போன்றவைகள் கருத்துகளை சுதந்திரமாக பரிமாறவும், திறமைகளை வெளிப்படுத்தவும் கிடைத்த வரபிரசாதமாகும். ஆனால் இது கூர்மையான இருபுற ஆயுதம்போன்றது. சில நேரங்களில் வைத்திருப்பவர்களையே கொன்று விடுகிறது. திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு…

திருப்பூரில் ஜல்லிக்கட்டு காளை படத்துடன் டி-சர்ட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

திருப்பூர்:தமிழர் பண்டிகைகளில் முக்கிய பண்டிகையாக பொங்கல் பண்டிகை இருந்து வருகிறது. இந்த பண்டிகையை தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகையை யொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டிகள் நடைபெறும்…

குன்னத்தூரில் மாணவிகள், பெண்களை கட்டிபிடித்த ‘சைக்கோ’ வாலிபர்!

குன்னத்தூர்:திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரை சேர்ந்த சண்முகம், சம்பூர்ணம் தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் வெங்கடாசலம் என்பவரை தத்து எடுத்தனர். அவரை டிப்ளமோ வரை படிக்க வைத்தனர். இந்நிலையில் சண்முகம், சம்பூர்ணம் ஆகியோர் அடுத்தடுத்து இறந்து விட்டனர். 20 வயதான வெங்கடாசலம் மீண்டும்…

பொது வேலை நிறுத்தம்- திருப்பூரில் 50 சதவீத பனியன் நிறுவனங்கள் மூடல்!

திருப்பூர்:மத்திய அரசை கண்டித்து இன்று நாடு முழுவதும் பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஐ.என் .டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யூ., உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து இருந்தது. திருப்பூரிலும் இன்று பொது வேலை…

திருப்பூரில் வாட்ஸ் அப் குரூப் தொடங்கி கஞ்சா விற்பனை- பெண் உள்பட 3 பேர் கைது!

திருப்பூர்:திருப்பூர் அங்கேரி பாளையத்தை அடுத்த வெங்கமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக அனுப்பர் பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்து…

திருப்பூரில் ரூ.1 லட்சம் கள்ளநோட்டு சிக்கியது!

திருப்பூர்:திருப்பூர் திருநீலகண்ட வீதியில் உள்ள மோகன் என்பவரது மொட்டைமாடியில் கள்ள நோட்டுக்கள் இருப்பதாக திருமுருகன்பூண்டி போலீசாருக்கு போனில் ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் முனியம்மாள் தலைமையிலான போலீசார் மோகன் வீட்டுக்கு சென்றனர். மொட்டைமாடியில் அங்குல அங்குலமாக தேடினர். அப்போது ஒரு…

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே காலை உணவு வழங்காததால் வாக்கு எண்ணும் அலுவலர்கள் தர்ணா!

அவினாசி:திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டார உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் அவினாசி அருகே உள்ள பெரியாயிபாளையம் திருவள்ளூவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சற்று நேரத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த பெண்…