Karur  Video News

கரூரில் மகன் தற்கொலை செய்து கொண்ட சோகத்தில் மனமுடைந்து ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை!

கரூரில் மகன் தற்கொலை செய்து கொண்ட சோகத்தில் மனமுடைந்து ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை செய்துக் கொண்டார். சணப்பிரட்டி எழில் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர், மனைவி கிருஷ்ணவேனி உயிரிழந்தார். எங்களது செய்திகளை…

கரூர் மாவட்டம் பரமத்தியில், இணைய வழி குற்றம் குறித்தும், மகளிர் மேம்பாடும் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது!

கரூர் மாவட்டம் பரமத்தி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ரமாதேவி அவர்கள் தலைமையில் வெள்ளாளர் மகளிர் கல்லூரியில் கணினி மற்றும் இணைய வழி குற்றம் குறித்தும், மகளிர் மேம்பாடு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தற்போது பெண்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் வரும்…

கரூர் மாவட்டத்தில் ஆளும் கட்சியினருக்கு மட்டும் விலையில்லா ஆடுகள் வழங்கப்படுவதாக புகார்!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ராஜேந்திரம் ஊராட்சியில் ஆளும் கட்சியினருக்கு மட்டும் விலையில்லா ஆடுகள் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நியாயம் கிடைக்கவில்லை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் ராஜேந்திரம் கிராமத்தில் உள்ள காந்தி சிலையிடம்…

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரி பேசும் வீடியோவை வெளியிட்டார் செந்தில் பாலாஜி எம்எல்ஏ!

கரூர்:கரூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வார்டுகளில் பதிவான வாக்குகள் க.பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்றது. இதில் தி.மு.க. -காங்கிரஸ் வேட்பாளர்கள் 2 பேரின் வெற்றியை மறைத்து அ.தி.மு.க. வென்றதாக புகார் எழுந்தது….

க.பரமத்தியில் ஜோதிமணி-செந்தில் பாலாஜி இன்று திடீர் சாலை மறியல்!

கரூர்:நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றியை மறைத்து அந்த 2 வார்டுகளில் அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் க.பரமத்தி அரசு…

வெற்றியை மாற்றி அறிவித்ததாக கூறி ஜோதிமணி, செந்தில் பாலாஜி உள்ளிருப்பு போராட்டம்!

கரூர்:கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பதிவான உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை க.பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் 14- வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் கலையரசி, தி.மு.க. கூட்டணி சார்பில்…

நகரத்தாா் பிள்ளையாா் நோன்பு விழா: ஒரு கிலோ உப்பு ரூ.33000-க்கு ஏலம்!

கரூரில் நடைபெற்ற நகரத்தாா் பிள்ளையாா் நோன்பு விழாவில் ஒரு கிலோ உப்பு ரூ.33000-க்கு ஏலம் போனது. உலகெங்கும் வாழும் நாட்டுக்கோட்டை நகரத்தாா் சமுதாயத்தினா் ஆண்டுதோறும் பிள்ளையாா் நோன்பினை கடைப்பிடித்து வருகிறாா்கள். பெரிய காா்த்திகை என்றழைக்கப்படும் திருவண்ணாமலை பெரிய தீபத்திருநாள் அன்று பிள்ளையாா்…

“கரூரில் விதிமுறையை மீறி தேர்தல் பிரச்சாரம்” 3 பேர் பிடிபட்டனர்!

கரூர் மாவட்டம் தும்பிவாடி ஊராட்சியில் தேர்தல் விதிமுறையை மீறி பிரச்சாரம் செய்த 3 பேரை பிடித்து பறக்கும் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தும்பிவாடி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிடும் குமாரவேலுவுக்கு ஆதரவாக இன்று காலை வாக்கு சேகரிக்கப்பட்டுள்ளது….

கரூர், திருப்பராய்த்துறை டோலுக்கு வரி செலுத்த மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணங்கள்.

கரூர் மாவட்டம் திருப்பராய்த்துறை டோலுக்கு வரி செலுத்த மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணங்கள்… 1) அரை வட்டச்சாலை திண்டுக்கரை முதல் பஞ்சப்பூர் வரை எங்கே? 2) பேருந்தில் பயணம் செய்ய டிக்கெட் எடுப்பது போல், திருச்சி செல்ல டோலில் பணம் செலுத்தி…

திருச்சி- கரூர் சாலையை அகலப்படுத்த ரூ.55 கோடி ஒதுக்கீடு ஓரிரு மாதங்களில் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தகவல்

திருச்சி- கரூர் சாலையை அகலப்படுத்த ரூ.55 கோடி ஒதுக்கீடுஓரிரு மாதங்களில் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தகவல் 01/09/2019, திருச்சி பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று திருச்சி- கரூர் நெடுஞ்சாலையை அகலப்படுத்த தமிழக அரசு ரூ.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது….