Erode  Video News

allowfullscreen>

இரவு 10 முதல் காலை 6 மணி வரை மார்கெட் இயங்கும் – ஈரோடு கலெக்டர்!

உலகை அறிவியல் ரீதியாகக் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக நடத்தி வந்த மனித சமூகத்திற்கு உலை வைத்துள்ளது கரோனா வைரஸ். இதிலிருந்து மீள்வதற்காக மருத்துவ போர் நடத்தி வருகிறது உலகத்தின் மருத்து இதயம். இதில் இந்தியா தனது மொத்த அரசின் பலத்தையும் செலுத்துகிறது….

ஈரோடு அருகே அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் மேலும் ஒருவர் அனுமதி!

பெருந்துறை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் மேலும் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொல்லம்பாளையத்தைச் சேர்ந்தவர் கொரோனா தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். பெருந்துறை அரசு மருத்துவமனையில் இதுவரை 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம்…

ஈரோட்டில் கொரோனா வைரஸ் பீதியால் ரூ.50 கோடி ரேயான் துணிகள் தேக்கம்!

கொரோனா வைரஸ் பீதியால் ஈரோட்டில் ரூ.50 கோடி மதிப்பிலான ரேயான் துணிகள் தேக்கமடைந்துள்ளது. மேலும், ஜவுளிச்சந்தையில்  உள்ள கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, பவானி, கோபி ஆகிய  பகுதிகளிலும், மாநகர பகுதிகளில் வீரப்பன்சத்திரம், அசோகபுரம், லக்காபுரம்,…

தக்காளி விலை வீழ்ச்சி- விவசாயிகள் கவலை!

ஈரோடு: தக்காளி விலை வீழ்ச்சியால் கொடுமுடி, அறச்சலூா் பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, அறச்சலூா், சிவகிரி, எழுமாத்தூா் பகுதிகளில் நெல் அறுவடைக்குப் பிறகு ஜனவரி மாதத்தில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காளிங்கராயன், கீழ்பவானி பாசனம் மூலம் விளைச்சல்…

அரசுக்கு வருமானத்தை நாங்கள்தான் கொடுத்து வருகிறோம் – டாஸ்மாக் கடையில் குடிமகன்கள் வாக்குவாதம்!

ஈரோடு:தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மதுபான கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழக அரசு மதுபானங்களின் விலையை உயர்த்தி திடீரென உத்தரவை வெளியிட்டது. அதன்படி குவாட்டர் ரூ.10, ஆப். ரூ.20, புல் ரூ.40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.இதைப்போல் பீர்…

விஜய் வீட்டின் வருமானவரி சோதனைக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் தொடர்பில்லை- இல.கணேசன்!

ஈரோடு:ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு அருகே உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் எந்த ஒரு இந்தியனுக்கும் பாதிப்பு ஏற்படாது. இந்த வி‌ஷயத்தில் நாட்டு நலனை…

ஈரோடு ரயில் நிலையத்தில் இலவச ‘வைபை’யுடன் நவீன பைக் ஸ்டாண்ட்!

 ஈரோடு ரயில் நிலையத்தில் இலவச வைபை வசதியுடன் கூடிய நவீன பைக் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளதோடு வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு சலுகை திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு ரயில் நிலையத்திற்கு தினமும் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. ரயிலில் பயணிக்கும் பயணிகள் தங்களது…

தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்- ஜி.கே.மணி!

ஈரோடு:ஈரோட்டில் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தமிழகத்தில் பாசன, நீர் மேலாண்மை திட்டத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என, தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். அத்திக்கடவு -அவினாசி திட்டத்துக்காக, டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபயணம், போராட்டம் நடத்தப்பட்டது. தற்போது…

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் ரூ.4.90 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்!

 ஈரோடு அருகே வெள்ளோடு வி.மேட்டுப்பாளையத்தில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்திற்கு கீழ்பவானி வாய்க்கால் கசிவுநீர் மற்றும் மழைநீருமே நீராதாரமாக இருந்து வருகிறது. 200 ஏக்கர்  பரப்பளவு கொண்ட இந்த சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் சீசன் காலங்களில் மஞ்சள் மூக்குநாரை, கரண்டிவாயன், கூழைக்கடா,…

கண்களை கட்டிக்கொண்டு படித்து, கணக்கு போட்டு அசத்தும் ஈரோடு மாணவி!

ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள கடத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி வாசுமதி. 6ம் வகுப்பு  வரை படிப்பில் பின்தங்கிய நிலையில் இருந்த வாசுமதி, தன் தந்தையான ராஜ்குமாரிடம் படிக்கும் விஷயங்கள் மறந்து விடுவதாக தெரிவித்துள்ளார். இதனால்…