Coimbatore  Video News

ஊழியர்கள் இல்லாத கடையில் ‘பிரட்’ விற்பனை அமோகம்- சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிகிறது !

கோவை:கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்படியும், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசின் உத்தரவை பொதுமக்கள் பின்பற்றி, சமூகவிலகலை கடைபிடித்து வருகிறார்கள்….

கோவை மத்திய சிறையில் இருந்து 136 கைதிகள் விடுதலை !

கோவை மத்திய சிறையில் இருந்து 5 பெண் கைதி உள்பட 136 கைதிகள் நள்ளிரவில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.  கரோனா வைரஸின் தாக்கத்தால், நாட்டில் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியான சூழல் நிலவுகிறது. அந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள்…

கரோனா: கோவை குற்றால அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை!

கரோனா  வைரஸ் பரவுவதை  தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒட்டியுள்ள வணிக வளாகங்கள் திரையரங்குகள்,  மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  மேலும் பொதுமக்கள் அதிகமாக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டுமெனவும்…

கொரோனா வைரஸ்- எகிப்து கப்பலில் உணவு இல்லாமல் தவிக்கும் தமிழர்கள்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவில் சரணாலயம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வருபவர் வனிதா ரங்கராஜ். இவரது கணவர் ரங்கராஜ். இவர்கள் வருடந்தோறும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது வழக்கம். அதன்படி கடந்த மாதம் வனிதா ரங்கராஜ் தனது கணவர்…

கோவையில் கள்ளநோட்டை புழக்கத்தில் விடும் முன்பே சிக்கிய கும்பல்- போலீஸ் விசாரணையில் தகவல் !

கோவை:கோவை சரவணம்பட்டி போலீசார் மணியக்காரன் பாளையம் பகுதியில் ரோந்து சென்றபோது வடவள்ளியை சேர்ந்த கிதர்முகமது (வயது 66), கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மகேந்திரன் (39) ஆகியோரிடம் இருந்து ரூ.60 ஆயிரம் மதிப்பிலான 200 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில்…

கோவை அருகே ஜல்லிக்கட்டு போட்டிகள்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார் !

கோவை: கோவை அருகே நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். கோவை மாவட்டம் செட்டிபாளையம் அருகே கோவை ஜல்லிக்கட்டு விளையாட்டு விழா நடைபெற்றது. மூன்றாவது ஆண்டாக கோவை மாவட்ட நிர்வாகமும், கோவை ஜல்லிக்கட்டு சங்கமும் இணைந்து இப்போட்டிகளை…

கோவை அருகே கல்லூரி மாணவர் கொலையில் 6 பேர் கும்பல் கைது !

கோவை:கோவை சூலூர் அருகே உள்ள நடு அரசூர் சடையன் தோட்டத்தை சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவரது மகன் தமிழ் செல்வன் (வயது 20). இவர் காளப்பட்டியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று இரவு…

ஈஷா யோக மையத்தில் இன்று மகா சிவராத்திரி விழா – குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு பங்கேற்பு!

கோவை ஈஷா யோக மையத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கய்ய நாயுடு பங்கேற்கிறாா். கோவை ஈஷா யோக மையத்தின் 26 ஆவது ஆண்டு மகா சிவராத்திரி விழா வெள்ளிக்கிழமை மாலை 6…

கோவை மாவட்டதில் சமையல் எரிவாயு உருளையை பாடையில் ஏந்தி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

விலை உயர்வை திடீரென உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்து சமையல் எரிவாயு உருளையைப் பாடையில் ஏந்தியபடி கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமையல் எரிவாயு உருளை விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி…

உருளைக்கிழங்கு வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி!

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன. இங்குள்ள உருளைக்கிழங்கு மண்டிகளுக்கு நீலகிரி மாவட்டம், கோலார், குஜராத், திம்பம், இந்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி உருளைக்கிழங்கு வருகிறது. நேற்று முன்தினம் மார்க்கெட்டுக்கு 30 லோடு உருளைக்கிழங்கு வந்திருந்தது. ஆனால்…