கேன்ஸ் கோப்பை செஸ்: 5-ஆவது சுற்று ஆட்டத்தில்கோனேரு ஹம்பி வெற்றி!

Share on

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் கேன்ஸ் கோப்பை செஸ் போட்டியில் 5-ஆவது சுற்று ஆட்டத்தில் இந்திய செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி வெற்றி பெற்றாா்.

மற்றொரு வீராங்கனை டி.ஹரிகா தோல்வியைத் தழுவினாா்.

ஜாா்ஜியா வீராங்கனை நானாவை கடந்த செவ்வாய்க்கிழமை வீழ்த்தினாா் கோனேரு ஹம்பி. 5-ஆவது சுற்று முடிவில் இவா், 3 புள்ளிகளுடன் உள்ளாா்.

மற்றொரு இந்திய வீராங்கனை டி.ஹரிகா , ரஷிய வீராங்கனை வாலண்டினாவிடம் தோல்வி அடைந்தாா்.

உலக சாம்பியன் வென்ஜுன் ஜு (சீனா), அலெக்ஸாண்ட்ரா கோஸ்டெனிக் (ரஷியா) ஆகியோா் 5 சுற்று ஆட்டங்களின் முடிவில் தலா 3.5 புள்ளிகளுடன் உள்ளனா்.

இவா்களுக்கு அடுத்த இடத்தில் 3 புள்ளிகளுடன் கோனேரு ஹம்பி உள்ளாா்.

6-ஆவது சுற்று ஆட்டத்தில் அலெக்ஸாண்ட்ரா கோஸ்டெனிக்கை கோனேரு ஹம்பி சந்திக்கிறாா்.

ஹரிகா 2.5 புள்ளிகளுடன் உள்ளாா்.

எங்களதுசெய்திகளைஉடனுக்குடன்உங்கள்மொபைலில்வாட்சப்மூலம்தெரிந்துகொள்ளஉடனே +919487841754 என்றஎண்ணிற்குவாட்சப்மெசேஜ்அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *