கட்டுக்கடங்காத கலிஃபோர்னியா காட்டுத்தீ !

Share on

அமெரிக்கா: கலிஃபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் நாசமாகியுள்ளன.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ மலைகளையும், நகரத்தையும் சூறையாடிக்கொண்டிருக்கிறது.கொழுந்து விட்டு எரியும் தீயில் வீடுகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள்,வாகனங்கள் என எல்லாம் எரிந்து நாசமாகின. இதுவரை கலிஃபோர்னியாவில் மூன்று இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கேம்ப் ஃபயர்,  ஊஸ்லி தீ, மேற்கு கலிஃபோர்னியாவில் மலைகளில் ஏற்பட்டகாட்டுத் தீ. இந்த மூன்று தீ விபத்துகளில் கேம்ப் ஃபயர் தான் அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். கேம்ப் ஃபயரில் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் தீயில் கருகி நாசமாகியுள்ளது. ஊஸ்லி தீ விபத்து 70ஆயிரம் ஏக்கரை நாசமாகியுள்ளது. மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 4,500 ஏக்கரை காலிசெய்துள்ளது.

கலிஃபோர்னியாவில் ஏற்பட்டுள்ள தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று 9 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் மேலும் 14 பேர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.கலிஃபோர்னியா காட்டுத் தீயின் காரணமாக சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். விபத்தில் டவுன் ஆப் பாரடைஸ் நகரம் முழுவதும் தீக்கு இறையானது.

இது பற்றி தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், “ டவுன் ஆப் பாரடைஸ் நகருக்கு அருகில் உள்ள மலைகளில் பற்றிய தீயானது வெகுவிரையாக நகரத்தை சூறையாடியுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவெனப் பரவியுள்ளது. பாரடைஸ் நகரில் சுமார் 6,400 வீடுகள், 260 வணிக வளாகங்களைச் சூறையாடியுள்ளது. 3000 வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாரடைஸ் நகரம் முழுவதும் புகை சூழ்ந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை அடையாளம் காண்பது சிரமமாக உள்ளது. உடல்கள் அனைத்தும் மோசமான நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 35 பேர் காணாமல் போனதாகத் தெரிகிறது. இதில் இறந்தவர்கள் யார்? காணாமல் போனது யார் என்ற விவரம் எதுவும் தெளிவாக இல்லை”என்றனர்.

கலிஃபோர்னியாவில் காற்றின் வேகம் தொடர்ந்து அதிகமாக இருக்கிறது. இதனால் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *