நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே இடைத்தேர்தல் நடத்தப்படும் – ஓ.பி.ராவத்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

18 எம்.எல்.ஏ க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து தமிழகத்தில் மொத்தம் 20 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளில் எப்போது தேர்தல் நடத்தப்படும் என அனைவரும் காத்திருக்கின்றனர். இப்போது உள்ள சூழலில் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலின் போது இந்த தொகுதிகளுக்கும் சேர்த்து நடத்தப்படும் என ஒரு சிலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *