தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது: நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்- ஓ. பன்னீர்செல்வம் !

Share on

சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. 2020 – 21ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்தார்.

வரும் நிதியாண்டுக்கான (2020-2021) நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

இந்த நிதிநிலை அறிக்கையில் வருவாய் வரவுகளை உயா்த்தவும், கடன் அளவுகளை கட்டுக்குள் வைக்கவும் திட்டங்கள் வகுக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

15-ஆவது சட்டப் பேரவையின் கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கையை, அதிமுக அரசு தாக்கல் செய்கிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் அதிமுக தொடா்ந்து ஆட்சியில் இருந்து வரும் நிலையில், 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறாா் ஓ.பன்னீா்செல்வம்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *