தினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். சலுகை

அக்டோபர் 31, 2018

பி.எஸ்.என்.எல். நிறுவன பயனர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். சலுகை

பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தீபாவளி தமாகா ஆஃபர் விலை ரூ.1,699 மற்றும் ரூ.2,099 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய சலுகை இந்தியா முழுக்க வழங்கப்படுகிறது. ரூ.1,699 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., பிரத்யேக ரிங்பேக் டோன் உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது, நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 80 கே.பி.யாக குறைக்கப்படுகிறது.

ரூ.2,099 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., பிரத்யேக ரிங் பேக் டோன், தினமும் 4 ஜி.பி. டேட்டா உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 80 கே.பி.யாக குறைக்கப்படுகிறது.

இத்துடன் பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு இலவச சிம் சலுகைகள் எஸ்.டி.வி.399 உடன் வழங்கப்படுகிறது. புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் போர்ட்-இன் செய்வோருக்கு ரூ.100 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், எல்.பி.ஜி. பில்களில் அச்சிடப்பட்டு இருக்கும் பி.எஸ்.என்.எல். கூப்பன்களை வழங்கும் போது பெற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *