Author Archives: admin

எம்.எல்.ஏ கருணாஸ் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

சென்னை : எம்.எல்.ஏ கருணாஸ் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 8ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கடந்தாண்டு பூலித்தேவன் பிறந்தநாள் விழாவில் வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் முன் ஜாமீன் கோரி கருணாஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் : கன்னியாகுமரி ஆட்சியர் வலியுறுத்தல்

கன்னியாகுமரி : அரபிக்கடலில் புயல் ஏற்பட உள்ளதால் ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் வி்டுத்துள்ளார். மேலும் அவசர உதவிக்கு 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மீனவர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிரான வழக்கு நாளை ஒத்திவைப்பு

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் நியூட்ரினோ திட்டத்திற்கு 31.44 ஹெக்டேர் நிலம் வழங்கியுள்ளதாகவும், திட்டத்திற்கான அடிப்படை கட்டமைப்பிற்கு உறுதியாக இருந்ததாகவும் தமிழக…

விமானம் மழையால் ரத்து

கிருஷ்ணகிரி : புதுச்சேரி – ஹைதராபாத் இடையே இயக்கப்படும் ஸ்பைஸ் ஜெட் விமானம் மழை காரணமாக இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று ஒரு நாள் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.

80 மூட்டைகள் ரேஷன் அரிசி பறிமுதல்

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே சிகரலப்பள்ளியில் சுமார் 80 மூட்டைகள் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன. சேலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பங்காருபேட்டைக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தியதாக ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம், புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்

சென்னை : இலங்கை அருகே வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகம், புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். அரபிக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி புயலாக…

தமிழகத்தில் அணை நிரம்பினால் பாதுகாப்பு கருதி அதனை திறக்க செயற்பொறியாளர்களுக்கு அனுமதி : பொதுப்பணித்துறை

சென்னை : தமிழகத்தில் அணை நிரம்பினால் பாதுகாப்பு கருதி அதனை திறக்க செயற்பொறியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் 89 அணைகளில் 15 பெரிய அணைகள் நிரம்பியுள்ளதாகவும், ஏரி, குளங்களில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை…

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம் : முதல்வர் பழனிசாமி

மதுரை : திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக சந்திக்க தயாராக உள்ளதாக மதுரையில் நடைபெற்று வரும் அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் அமையும் என்று அவர் உறுதியளித்துள்ளார். மேலும் பருவமழை…

96 படத்திற்காக தனது சம்பளத்தை கொடுத்து உதவிய விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி – த்ரிஷா நடித்துள்ள ‘96’ திரைப்படம் இன்று வெளியாக இருந்தது. இந்நிலையில் திடீரென படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து தனது முழு சம்பளத்தையும் ரிலீஸுக்காக விஜய்சேதுபதி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட நேரத்தில் திரைப்படத்தை ரிலீஸ் செய்வதில்…

8 நிமிட சண்டை காட்சிக்கு ரூ.54 கோடி செலவு

சிரஞ்சீவி நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வரும் புதிய படம் சைரா நரசிம்ம ரெட்டி. சுதந்திர போராட்ட வீரர் உய்யலா வாடா நரசிம்ம ரெடடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் தயாராகி வருகிறது. ஆந்திராவில் மக்கள் மத்தியில்…