“177 கோடிக்கு ஏலம்” சாதனை படைத்த ஓவியம்!

ஜப்பானைச் சேர்ந்த ஓவியர் யோஷிடோமோ நாரா வரைந்த ஓர் ஓவியம் 25 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விடப்பட்டு சாதனை படைத்துள்ளது.

ஹாங்காங்கில் சீன ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் அதன் நிர்வாகத் தலைவர் கேரி லேம் பதவி விலகக் கோரியும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஹாங்காங் அரசு எவ்வளவு முயன்றும் மாணவர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று ஹாங்காங் கண்காட்சி மையத்தில் நடந்த ஓவியக் கண்காட்சியில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஓவியர் யோஷிடோமோ நாரா வரைந்த சிறுமியின் ஓவியம் எதிர்பாராத விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டு பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சுமார் 25 மில்லியன் டாலருக்கு அந்த ஓவியம் ஏலத்தில் எடுக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 177.9 கோடி.

அந்த ஓவியத்தில் சுட்டித்தனமாக சிறுமி ஒருத்தி, அச்சுறுத்தும் கண்களுடன் தனது ஒரு கையைப் பின்னால் மறைத்துக்கொண்டு நிற்கிறார்.

இந்த ஓவியத்திற்கு ’Knife Behind Back ’ (பின்னால் கத்தி) எனப் பெயரிடப்பட்டுள்ளது. அந்தச் சிறுமி கத்தியை ஏன் பின்னால் மறைத்துக்கொண்டு இருக்கிறார் என்பதை, பார்வையாளர்களின் கற்பனைக்கே விட்டுச் சென்றிருக்கிறார் ஓவியர்.

யோஷிடோமோ நாரா வரைந்த முந்தைய ஓவியங்களைவிட இந்த ஓவியம் அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டு சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *