திருவண்ணாமலையில் உள்ள ATM-ல் பணம் எடுப்பவர்களை ஏமாற்றி கொள்ளையடித்தவர்கள் கைது..

Share on

திருவண்ணாமலையில் உள்ள கரூர் வைஸ்யா வங்கியில், ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை நூதன முறையில் மோசடி செய்த வங்கியின் மேலாளர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை சன்னதி தெருவில் இயங்கி வரும் கரூர் வைஸ்யா வங்கியில், வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த நகைகள், 20 பைகளில் வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த நகைகள் திடீரென காணாமல் போயின. இதுகுறித்து, வங்கியின் விழுப்புரம் கோட்ட மேலாளர் முரளி, திருவண்ணாமலை குற்றப்பரிவு போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், வங்கியின் முதுநிலை மேலாளர் சுரேஷ், ஊழியர்கள் தேன்மொழி, இசைவாணி, கார்த்திகேயன், மணிகண்டன் உள்ளிட்ட 7 பேர் இணைந்து, நகைகளை நூதன முறையில் கொள்ளையடித்தது தெரியவந்தது. அதன்படி, சிசிடிவி காமிராவில் பதிவாகும் வகையில், வாடிக்கையாளர்களின் நகைகளை வங்கி லாக்கரில் வைத்துள்ளனர்.

பின்னர், சிசிடிவி காமிராவின் இணைப்பு துண்டித்துவிட்டு, நகைகள் திருடியுள்ளனர். மேலும், வங்கியில் பல்வேறு போலி ஆவணங்களை சமர்பித்தும், நகைகளை மோசடி செய்தது, கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, 7 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து நகைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *