Asian Hockey Champions Trophy 2018, Hockey India,

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி… ஓமனில் இன்று தொடக்கம்

ஆசிய சாம்பியன்ஸ் ஆண்கள் ஹாக்கி டிராபியானது ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இன்று தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, மலேசியா, பாகிஸ்தான் தென் கொரியா, ஜப்பான் மற்றும் ஓமன் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். தொடக்க நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டத்தில்(இரவு 8,25 மணி) மலேசியா அணி ஜப்பானை எதிர்கொள்கிறது.

இரண்டாவது ஆட்டத்தில் கேப்டன் மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, ஓமன் அணியை (இரவு 10,40) எதிர்கொள்கிறது. இன்று தொடங்கும் இந்த ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டியானது வரும் 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-2 சேனலில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *