அரியலூர் மாவட்ட மாணவர்களை அலட்சியம் செய்யும் அரசுப் பேருந்துகள் ..!! மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?

அரியலூர் மாவட்டம், அரியலூர் பேருந்து நிலையத்தில் தினம் தினம் அரசு பள்ளி மாணவர்கள் பேருந்து நடத்துனர், ஓட்டுநர் அவர்களால் அலட்சியம் செய்யப் படுகிறார்கள். பேருந்து எடுக்கும் வரை மாணவர்கள் பேருந்துக்கு வெளியில் நிற்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

அவர்கள் இலவச பேருந்து பயண அட்டை பயன்படுத்தி செல்வதால் அவர்கள் பேருந்து வந்தவுடன் ஏற கூடாது என்பதை விதி போல் சொல்கிறார்கள். இந்த செயலால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் அவர்கள் இதற்க்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .

Thanjavur, திருச்சி, பெரம்பலூர் வழி செல்லும் மாணவ மாணவிகள் மிகவும் சிரம படுகின்றார்கள். மேலும் பேருந்துக்கு வெளியே அதிக நேரம் நிற்பதால் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. அரசு பணிமனை பள்ளி நேரத்தில் சாதாரண பேருந்து விடுங்கள், அல்லது நகர பேருந்துகளில் ஏற ஆவணம் செய்யுங்கள்.

நன்றி – M. S. மணிகண்டன் (சமூக ஆர்வலர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *