கால்நடை வளர்ப்பிற்கு, தீவனப்பயிர் அபிவிருத்தி திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் – திருவண்ணாமலை கலெக்டர் தகவல்

Share on

கால்நடை வளர்ப்பிற்கு, தீவனப்பயிர் அபிவிருத்தி திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் தகவல்
கால்நடை வளர்ப்பிற்கு, தீவனப்பயிர் அபிவிருத்தி திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் தகவல்

கால்நடை வளர்ப்பிற்கு தீவனப்பயிர் அபிவிருத்தி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கே.எஸ். கந்தசாமி கூறினார்.

திருவண்ணாமலை,

பால் உற்பத்தியை பெருக்குவதற்கு கறவை மாடுகளுக்கு தேவையான அளவு பசும் தீவனம் வழங்குவது மிகவும் இன்றியமையாதது. கால் நடைகளுக்காக மொத்த உற்பத்தி செலவினத்தில் 65 முதல் 70 சதவீதம் தீவன செலவினமாகும். தீவனம் மற்றும் பசுந்தீவனத்தின் தேவைக்கும், உற்பத்திக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.

ஆகவே தீவன பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும், கால்நடை வளர்போர் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தமிழக அரசு கூடுதல் தீவன மேம்பாட்டு திட்டம் 2019-2020-ம் ஆண்டுக்கான அரசு மானியத்துடன் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் அரசு மானியத்துடன் கூடிய 1,500 ஏக்கரில் இறவை மற்றும் மானாவாரியில் 3 கிலோ சோளம், 1 கிலோ காராமணி மற்றும் உரங்கள் தீவன பயிர் செய்திடவும், எல்லா இனங்களிலும் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை உதவி மருத்துவர்களை நேரில் தொடர்பு கொண்டு, பயன்பெற விருப்பமுள்ள திட்டங்களை குறிப்பிட்டு எழுத்து மூலமாக விண்ணப்பம் அளித்திடலாம்.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *