இடைத்தேர்தலுக்கு 5 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது அதிமுக – தங்க தமிழ்செல்வன் குற்றச்சாட்டு

சென்னை: இடைத்தேர்தலுக்கு செலவு செய்ய  5 ஆயிரம் கோடியை  அதிமுக  ஒதுக்கியுள்ளதாக தங்க தமிழ்செல்வன் குற்றச்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து மொத்தம் காலியாக உள்ள 20 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் நேற்று சென்னையில் அதிமுக  நிர்வாகிகள் ஒன்று கூடி விவாதித்தனர். கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால் கூட்டத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டது என அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் ஆண்டிபட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் இந்த இடைத்தேர்தலின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்க ரூபாய் 5 ஆயிரம் கோடியை அதிமுக  ஒதுக்கியுள்ளதாக குற்றச்சாட்டியுள்ளார். ஒரு ஊட்டுக்கு ரூபாய் 10ஆயிரம் கொடுக்க உள்ளதாகவும், ஆனால் அவர்களால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *