படம் வெற்றி பெற வேண்டி நடிகை சமந்தா பாதயாத்திரை!

Share on

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை சமந்தா இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.

தமிழில் வெளியாகி வெற்றிபெற்ற 96 திரைப்படம், தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இதில் நாயகியாக நடித்துள்ள சமந்தா, படம் வெற்றி பெற வேண்டி திருப்பதி மலை அடிவாரம் அலிபிரியில் இருந்து திருமலைக்கு நேற்றிரவு நடைபாதை வழியாக வந்து இன்று காலை கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் வெளியே வந்த சமந்தாவை கண்ட ரசிகர்கள், அவருடன் கைகுலுக்கி புதிய படம் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் சிலர் அவருடன் சேர்ந்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, தமிழில் 96 படம் எடுக்கப்பட்டது போல உணர்ச்சிபூர்வமாக ஜானு படம் எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *