ஈரோடு மாவட்டம் அன்னூர் அருகே அரசுப்பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து..

Share on

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன்  அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கபட்ட நிலையில் படுகாயமடைந்தவர்கள் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கருப்பசாமியும், பேருந்து மோதியதில் காயம்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து தகவல் அறிந்த அன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களதுசெய்திகளைஉடனுக்குடன்உங்கள்மொபைலில்வாட்சப்மூலம்தெரிந்துகொள்ளஉடனே +919442879388 என்றஎண்ணிற்குவாட்சப்மெசேஜ்அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *