16 பந்தில் 74 ரன் விளாசிய ஆப்கனிஸ்தான் வீரர்

துபாய்: துபாயில் நடைபெற்ற டி10 லீக் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது ஷாஜத் அதிரடியாக 16 பந்தில் 74 ரன் எடுத்து சிறப்பாக விளையாடியுள்ளார்.

துபாயில் ராஜ்புட் – சிந்திஸ் அணிகளுக்கு இடையே இன்று  நடைபெற்ற போட்டியில் பல்வேறு முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். முதலில் விளையாடிய சிந்திஸ் அணி 10 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன் எடுத்திருந்தது.

இதனையடுத்து 95 ரன் என்ற இலக்குடன் விளையாடிய ராஜ்புட் அணியில் தொடக்க வீரர்களாக நியூசிலாந்து வீரர் மெக்கல்லம், முகமது ஷாஜத் இருவரும்  களமிறங்கினர். இருவரும் சிந்திஸ் வீரர்களின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். முதல் ஓவரிலேயே 20 ரன் அடிக்கப்பட்டது. மெக்கல்லம் இரண்டு சிக்ஸர் அடிக்க 2வது ஓவரில் 23 ரன் எடுக்கப்பட்டது.

மெக்கல்லம் அதிரடியாக விளையாடினாலும், அவருக்கு வாய்ப்பே கொடுக்காமல், சந்திக்கும் பந்தையெல்லாம் சிக்ஸரும், பவுண்டரியுமாக மாற்றினார் அகமது. வெறும் 12 பந்துகளிலேயே அகமது அரைசதம் விளாசி சாதனை படைத்தார்.

இறுதியில் வெறும் 4 ஓவரில் 96 ரன்கள் அடித்து வெற்றியை பதிவு செய்தனர். மெக்கல்லம் 8 பந்துகளில் 21 ரன் விளாச, முகமது 16 பந்தில் 74 ரன் குவித்து இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *