https://www.mrchenews.com/wp-content/uploads/2020/06/thanjaore-1.jpg

தஞ்சையில் மதுக்கடை திறக்க கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது!

Share on

தஞ்சையில் மதுக்கடை திறக்க கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ் தமிழ்ச்செல்வி தலைமையில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,

தஞ்சாவூர் கல்லணை கால்வாய் மேல் கரையில் திருச்சி நாகை சாலையில் எலைட் மதுபானக் கடை மற்றும் பார்களை ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன இங்கு மதுக்கடை திறக்கப்பட்டால் சமூக அமைதி பாதிக்கப்படும் சூழல் உள்ளது இது குறித்து இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை எனவே தாங்கள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மதுக்கடையை இப்போது திறக்க அனுமதிக்கக்கூடாது இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் என் குருசாமி மாதர் சங்க நிர்வாகி வசந்தி மற்றும் மோகன் சசிகுமார் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் உடனிருந்தனர்

#MrChe #மிஸ்டர்சே

தஞ்சாவூர் மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள

Whatsapp Link- https://chat.whatsapp.com/H5EtQ8RdkDR6rDO9MCwfy3

Facebook Link – https://www.facebook.com/groups/ThanjavurNews/


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *