துறைமுகம் பகுதியில் புதிதாக 1449-கண்காணிப்பு கேமராக்கள் – ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைப்பு.

Share on

சென்னை துறைமுகம்  சரகம் மற்றும் ஏழுகிணறு பகுதிகளில்  புதிதாக பொருத்தப்பட்டுள்ள  1449  சி.சி.டி.வி   கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தொடங்கி வைத்தார்.

குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், நடந்த குற்றங்களில் குற்றவாளிகளை கைது செய்யவும் சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன. மேலும், பல குற்றச் சம்பவங்கள், அசம்பாவிதங்கள், வாகன விபத்துக்கள் மற்றும் வன்முறை சம்பவங்களின்போது உண்மை தன்மையை அறிந்து கொள்வதற்கு சிசிடிவி கேமரா காட்சிகள் பெரிதும் உதவியுள்ளன. 

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சிசிடிவி கேமராக்களை சென்னை பெருநகர் முழுவதும் பொருத்தி, குற்றங்கள் நடவாமல் தடுக்க வேண்டும் எனவும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், சென்னை பெருநகர் முழுவதும் பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், அவர்கள் கேட்டுக் கொண்டார்.

மேலும், சென்னை பெருநகர காவல்துறை சார்பில், பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சிசிடிவி கேமராக்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டு சென்னை பெருநகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.  
இதன் தொடர்ச்சியாக, நேற்று (09.02.2019) மாலை சுமார் 5.30 மணியளவில்  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், அவர்கள்  பூக்கடை காவல்  மாவட்டம், துறைமுகம் சரகம் மற்றும் ஏழுகிணறு பகுதிகளில் புதிதாக நிறுவப்பட்ட 1449 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் காவல் கூடுதல் ஆணையாளர் (வடக்கு) திரு.ஆர்.தினகரன், இ.கா.ப, இணை ஆணையாளர் (வடக்கு) திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப.,  பூக்கடை  துணை ஆணையாளர் திரு.அரவிந்தன் இ.கா.ப,  உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள், காவலர்கள், வியாபார சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *