Kamaraj

நதிகள் இணைப்புக்கான இந்திய அரசின் உயர் மட்டக்குழுவின் உறுப்பினருமான ஏ.சி.காமராஜ் – ஆலோசனை

காவேரி ஆற்றின் குறுக்கே மேகே தாதுவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக மாநிலத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.இந்த அணை கட்டப்படுவதால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பது சிரமம் ஆகும் .தமிழகத்திற்கு கொடுக்கும் தண்ணீரை கடலில் விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் தண்ணீரை எங்களிடம் கேட்கிறார்கள் என்பதே ,புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக சொல்லும் காரணம் ஆகும்.

இதற்கு தீர்வாக மதுரையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறைப் பொறியாளரும் நதிகள் இணைப்புக்கான இந்திய அரசின் உயர் மட்டக்குழுவின் உறுப்பினருமான ஏ.சி.காமராஜ் அவர்கள் மேகே தாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதைத் தடுக்க நீர் வழிச்சாலைத் திட்டத்தைச் செயல் படுத்தினால் மேட்டூர் அணையைப் போல் ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவு தண்ணீரைத் தேக்கலாம் என்று ஆலோசனை தெரிவித்துள்ளார்.

மேலும் இதனை உடனே செயல் படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *